ரஜினியை கிண்டல் செய்வதா? கவலைப்பட்ட கமல்!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோமாளி’ திரைபடத்தின் ஆனது டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கோமாவால் பாதிக்கப்பட்டு நினைவிழந்து போன கதாநாயகன், மீண்டும் நினைவை பெறுகிறார்.

அவ்வாறு அவர் நினைவு பெற்றதை உறுதி செய்ய தொலைக்காட்சியில் ஒரு கட்சி ஓடுகிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்கிறார். அது எந்த வருசம் என கதாநாயகன் கேட்க, 2016ம் என்று கூறும் போது இல்லை இது 1996 என்கிறார்.

இது ரஜினி ரசிகர்களிடையே பயங்கரமான சலசலப்பை உண்டாக்கியுள்ளது. அவர்கள் படத்திற்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டிங்கும் செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் நடிகர் கமல்ஹாசனுக்கும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ், “இன்று காலை கோமாளி டிரெய்லரை கமல் பார்த்தார். ரஜினியின் அரசியல் வருகையை குறித்தான விமர்சனத்தை பார்த்த உடன், தயாரிப்பாளரை தொலைப்பேசியில் அழைத்து அந்த காட்சியை நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று வுருத்தப்பட்டார் நட்பின் வெளிப்பாடா நியாயத்தின் குரலா” என பதிவு செய்துள்ளார்.