இளவரசர் ஹரிக்கு ஸ்பெயின் இளவரசர் விடுத்த கொலை மிரட்டல்!

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு ஸ்பெயினின் இஸ்லாமிய இளவரசர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவர் மிரட்டல் விடுத்த விடயம் வெளிவந்துள்ளது.

தன்னை ஸ்பெயினின் இஸ்லாமிய இளவரசர் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவர், மேகன் மெர்க்கலுக்கும் இளவரசர் ஹரிக்கும் கொலை மிரட்டல்கள் விடுத்தவாறு இருந்தார்.

தொடர்ச்சியாக இருவருக்கும் அனுப்பப்பட்ட இமெயில்களில் அவர், தன்னை நெதர்லாந்து சிறையில் வைத்து சித்திரவதை செய்ததற்காக ராஜ குடும்பமே அழிந்துபோகும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அந்த மர்ம நபரை ட்ராக் செய்த பொலிசார், இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன் அவரை கைது செய்தனர்.

அந்த நபரின் பெயர் Saleh என்பதும், அவர் Leicesterஐச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

தன்னை ஸ்பெயின் இளவரசருக்கு முறைதவறிப் பிறந்த பெண்ணின் கணவர் என்று கூறிக்கொண்ட அந்த நபர், கடுமையான மோசமான வார்த்தைகளால் ராஜ குடும்பத்தை விமர்சித்திருந்தார்.

முதலில் தன் மீதான் குற்றச்சட்டுகளை மறுத்த Saleh, பின்னர் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Saleh, தண்டனையாக, மன நல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.