1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசுத்தொகையை வென்ற மகன்.!

நேரத்தை அதிகம் வீணடிப்பதாக திட்டிக்கொண்டே இருந்த தாயிடம் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசுத்தொகையை கொடுத்து அவருடைய மகன் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த ஜாதன் அஷ்மான் என்கிற 15 வயது சிறுவன் பிரபலமான Fortnite என்கிற ஆன்லைன் விளையாட்டை தினமும் அதிக நேரம் செலவழித்து விளையாடி கொண்டிருந்துள்ளான்.

இதனை பார்த்து சிறுவனின் தாய் ஆத்திரமடைந்து, படுக்கையறையில் நேரத்தை வீனப்படிப்பதாக கூறி திட்டிக்கொண்டே இருந்துள்ளார்.

இந்த நிலையில் Fortnite விளையாட்டின் மூலம் ஜாதன் அஷ்மான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஆர்தர் ஆஷே டென்னிஸ் மைதானத்திற்குள் நடைபெற்ற மூன்று நாள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார்.

30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டு விளையாடினர். இறுதியில் இரட்டையர் பிரிவில் டச்சு கூட்டாளருடன் இணைந்து விளையாடிய ஜாதன் அஷ்மான் இரண்டாவது பரிசை வென்றார்.

தான் வென்ற 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசுத்தொகையை தன்னுடைய தாயிடம் கொடுத்து ஜாதன் அஷ்மான் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.