சேரனின் பேச்சால் அதிர்ந்த பிக்பாஸ் அரங்கம்!

பிக்பாஸில் இன்று போட்டியாளர்களை திரை மூலம் சந்தித்த கமல் மீராவை கேள்விகளாக கேட்டு கதிகலங்க வைத்தார்.

அதன்பின், எதாவது நீங்கள் பேச விரும்புகிறீர்களா? என கமல் கேட்டப்போதே சேரனுக்கு ஒரு பக்கம் கண்ணீர் வழிந்தது. அப்படியே பேச ஆரம்பித்த சேரன், இது சாதாரண விஷயமில்லை சார். எனக்கு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

அப்பன் எப்படியோ அப்படி தான் பிள்ளைகள் என்று நினைப்பார்கள். நான் ஒழுக்கமாக இருக்க வேண்டும். என்னை பற்றி யாரும் தவறாக நினைத்துவிட கூடாது. அது மட்டுமின்றி இன்று என் மனைவியின் பிறந்தநாள். ஆனால் அதை கூட என்னால் இந்த சம்பவத்தால் மறக்க முடியவில்லை என்று மேலும் கண்கலங்கினார்.

சேரன் பேசிய ஒவ்வொரு வரிக்கும் பார்வையாளர்களிடம் இருந்து வந்த கைத்தட்டல் அரங்கத்தையே அதிர வைத்தது.