இவர் முக ஸ்டாலின் பேரனா? உண்மை பின்னணி!!

நியு இந்தியா எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் உடல் முழுக்க தங்க நகைகள் அணிந்த நபர் ஒருவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

வழக்கத்தை விட அதிகளவு தங்க நகைக்கள் அணிந்திருக்கும் நபர் முக ஸ்டாலின் பேரன் என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

திராவிட பெருமையை பாருங்கள், இவர் தான் முக ஸ்டாலின் பேரன் என அந்த பதிவு தலைப்பை கொண்டிருக்கிறது.

உண்மையில் புகைப்படத்தில் தங்க நகைகள் அணிந்திருக்கும் நபர் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவில் வசிக்கும் ஹர்ஷ்வர்தன் பந்தர்கார் ஆகும்.

இவர் அதிகளவு தங்க நகைக்கள் அணிவதில் பிரபலமாக அறியப்படுகிறார். ஃபேஸ்புக் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்ததில் பந்தர்காரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் கிடைத்தது.

இன்ஸ்டாகிராமில் பந்தர்காரை சுமார் 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.

வைரல் புகைப்படம் தவிர பந்தர்கார் பவுன்சர்களுடன் நிற்கும் புகைப்படங்கள் பல்வேறு கோணங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

வைரல் பதிவின் தலைப்பில் சபரீசன் மகன் என கூறப்பட்டுள்ளது. உண்மையில் ஸ்டாலின் பேரன் இன்பநிதி நடிகரும், திமுக வின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகன் ஆவார்.

அந்த வகையில் வைரல் பதிவுகளில் எந்த உண்மையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
வைரல் புகைப்படத்தில் இருப்பவர் புனேவில் ‘கோல்டன் பாய்’ என அழைக்கப்படுகிறார்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர்.

சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.