வைல்ட் கார்ட் மூலம் நுழையவுள்ளாரா இந்த நடிகை?

பிக்பாஸில் மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று முன்பே அறிவித்து இருந்தனர். ஆனால் இதுவரை 16 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

அந்த ஒரு போட்டியாளர் யார் என்பது தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. சில வாரங்களுக்கு முன் சீரியல் நடிகை ஆல்யா மானசா நுழையவுள்ளார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை கயல் ஆனந்தியின் பெயர் அடிப்படுகிறது.

பிரபு சாலமனின் கயல் படத்தின் மூலம் பிரபலமான இவரது கையில் தற்சமயம் முன்னணி நடிகர்களின் படங்கள் இல்லாவிட்டாலும் கணிசமான படங்களில் நடித்து வருகிறார். இதனால் இவர் தான் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் நுழையவுள்ளாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.