பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி!

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் தீராத வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த நபர் நுளம்பு கடிக்கு உள்ளாமையினால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பணி புரிந்த போது நுளம்பு கடித்ததால் கொலின் வைட்ஸைட் என்ற பிரித்தானியர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

லிவர்பூலில் பிறந்து வசித்து வரும் 52 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். அவரை குணப்படுத்துவதற்காக மனைவி உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்தபோது அவருக்கு நிமோனியா மற்றும் செப்சிஸை என்ற ஆபத்தான நோய்கள் ஏற்பட்டு அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

தற்போது அவரால் கண் மாத்திரமே சிமிட்ட முடியும். முற்றாக அவர் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“இந்த நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது. நுளம்பு பரவலை குறைக்க வேண்டும். இவ்வாறான நிலைமையில் இருந்து அவர் எப்படி மீண்டு வருவார் என எங்களுக்கு தெரியவில்லை என பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த குடும்பத்திற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் உதவி செய்துள்ளனர். இந்த நிதியின் மூலம் அவரது வைத்திய செலவுகள் முன்னெடுக்கப்படுவதாக மனைவி குறிப்பிட்டுள்ளார்.