பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி ஆவார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவருக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸிர்க்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததில் இருந்து பிரியங்கா பல நாடுகளுக்கு தன் கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருகின்றார். பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பின்பும் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவர்.
இந்நிலையில் பொது இடத்தில் பெற்ற தாய் மதுசோப்ரா மற்றும் அவர் கணவர் ஆகியோர் முன்பே பிரியங்கா சோப்ரா சிகரெட் பிடித்து உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.






