செக் மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சிறை தண்டனை!

கடந்த 2013 ஆம் ஆண்டு பூனம் சேத்தியிடம் 22 லட்சம் ரூபாய் கடனாக வாங்கிய பாலிவுட் நடிகை கொய்னா அதற்காக கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பி விட்டன. இதையடுத்து பூனம் சேத்தி மும்பை மாவட்ட நீதிமன்றதில் கொய்னா மீது வழக்கு தொடர்ந்தார்.

ஆறு ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் மும்பை மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது, அதில் காசோலை மோசடியில் ஈடுபட்ட பாலிவுட் நடிகை கொய்னாவுக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை மற்றும் 4 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், தீர்ப்புக்கு பின்னர் செய்தியளர்களை சந்தித்து கொய்னா பேட்டியளித்தார், மும்பை மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். நடிகை கொய்னாவுக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையால் அவரது ரசிகர் அதிர்ச்சியில் உள்ளனர்.