இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 14 ஆம் தேதி இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது.
இதில் முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே சொதப்பி வந்ததன பின்னர் இங்கிலாந்து அணியும் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் மட்டுமே எடுத்தனர் இதனால் இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் விளையாடும் நிலை வந்தது.
பின்னர் சூப்பர் ஓவர் முறையில் அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
50 ஓவரின் 4-வது பந்தை பவுண்டரி விரட்டி பென் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் ஓட முயற்சித்தார். நியூசிலாந்து வீரர் கப்தில் ரன் அவுட் செய்யும் நோக்கத்துடன் பந்தை விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார்.
பந்து எதிர்பாராத விதமாக ஸ்டம்பில் படாமல் பேட்டியில் உரசி பவுண்டரிக்கு சென்றது இதற்கு நடுவர் 6 ரன்கள் கொடுத்தது போட்டியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடுவரின் இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த சர்ச்சைக்கு இதுவரை மௌனம் காத்துவந்த ஐசிசி தரப்பிலிருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிசி செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில் எந்த ஒரு முடிவையும் களத்தில் உள்ள நடுவார்களே ஐசிசி விதியின்படி முடிவெடுப்பார்கள். நடுவர்களின் முடிவில் எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்க முடியாது என்று கூறினர்.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் நடுவராக இருந்த குமார் தர்மசேனா கருத்து தெரிவித்துள்ளார். டிவியில் பார்க்கும் போதுதான் நான் கொடுத்த முடிவு தவறு என்று புரிந்து கொண்டேன். ஆனால் அதற்கு நான் வருத்தப்படவில்லை. அந்த நேரத்தில் களத்தில் இருந்த மற்ற நடுவரிடம் கலந்தாலோசித்தேன். ஆனால் அப்போது டிவி ரிப்ளை பார்க்க முடியாது என்பதால் நடுவரிடம் ஆலோசித்து அவர்கள் எல்லைக்கோட்டை கடந்தாக கூறிய பின்னரே 6 ரன்கள் கொடுத்தேன் என தெரிவித்துள்ளார்.