கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதான நிர்மலாதேவி மனநல பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக இருந்த நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 8ஆம் திகதி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்த நிர்மலாதேவி அங்கு வினோதமாக நடக்க தொடங்கினார். அதுவரை நன்றாக இருந்த முடியை வெட்டி காதில் தொங்க விட்டு கொண்டார், பிறகு அவிழ்த்து கொண்டார், காமாட்சி அம்மன் முதல் தர்கா வரை ஒரே நாளில் அருப்புக்கோட்டையை தலைவிரி கோலத்துடன், அலற வைத்தார்.
இதனால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரோ, மன அழுத்தத்தினால் இப்படி நடந்து கொண்டுள்ளரோ என்ற சந்தேகமும், குழப்பமும் ஏற்பட்டது.
அதற்கேற்றார் போல மறுநாளே தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்று அவரே வழக்கறிஞருக்கு போன் செய்து கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், அன்றைய வழக்கினை இன்றையை திகதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்த நிலையில் இன்றும் நிர்மலாதேவி ஆஜராகவில்லை.
அவர் ஏன் நீதிமன்றத்துக்கு இன்று வரவில்லை என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
மன அழுத்தத்தில் உள்ள அவர் உளவியல் சிகிச்சை பெற்று வருகிறாராம்.
இன்று கூட சிகிச்சை பெறுவதற்காகத் ஒரு மனநல மருத்துவமனைக்கு சென்றுள்ளாராம்.
நிர்மலாதேவியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறிய அளவிலான மனநல பிரச்சனைதான், 4 முறை இதற்கு சிகிச்சை எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.