நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு 10 பேரக்குழந்தைகள் வேண்டுமா?

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதற்கிடையே, திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் இருந்துள்ளது லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவரை 3 வருடங்களாக காதலித்து வந்தார். இவரது தனது தந்தை கமல் ஹாசனிடமும் சம்மதம் கேட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவரின் தாயான சரிகாவிடம் காதலரை அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில், நீண்ட காலமாக காதலித்து வந்த மைக்கேல் கோர்சேல் என்பவருடனான காதல் முடிந்துவிட்டதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தெரிவித்திருந்தார். இதனால், இது குறித்து எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை.எனக்கு இனிமேல் எல்லாமே சினிமா, இசை தான். அதில் தான் நான் அதிக கவனம் செலுத்த உள்ளேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பேஸ் அப் அப்ளிகேசன் மூலம் பிரபலங்கள் வயதான தோற்றம் போல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது. இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது வயதான தோற்றத்தை இன்ஸ்டாகிராம் பதிவிட்டு, அதில் முக்கியமான பதிவு ஒன்றையும் கூறினார். நான் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது, நான் வாழ்ந்த அருமையான வாழ்க்கைக்கும், 10 பேரக்குழந்தைகளுக்கும், உலகம் முழுவதும் உள்ள எனது அழகான வீடுகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.