குமாரசாமி செய்த காரியத்தால், குதூகலமான தமிழக மக்கள்.!

கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழியுடன் உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகா விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர் திறக்க முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகத்திற்கு கர்நாடக அணிகளில் இருந்து நாளொன்றுக்கு 855 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது மழை காரணமாக மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காவிரியாற்றில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.