மறுமணம் செய்ய தயாராக இருந்து இளவரசி டயானா.. தடையாக இருந்தது யார்?

இளவரசி டயானா மறுமணம் செய்துக்கொண்டு குழுந்தைகளை பெற்றேடுக்க ஆசைப்பட்டார் என மெஜஸ்டி பத்திரிகையின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த மெஜஸ்டி பத்திரிகையில் தலைமை ஆசிரியர், ஜூன் 1997 ஆம் ஆண்டு, டாயனா மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாமா என்பது பற்றி விவாதித்தோம்.

ஹாரி எப்போதும் தன்னை இன்னொரு குழந்தையைப் பெறும்படி கேட்டுக்கொண்டிருப்பதாகக் டாயனா கூறினார். இளவரசி இன்னும் குழந்தைகளை பெற்றேடுக்க விரும்புவதாகவும், எப்போதும் தனிமையில் இருப்பதை விரும்பவில்லை எனவும் கூறினார்.

டயானாவின் இளைய மகனான இளவரசர் ஹாரி, இளவரசி மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினார், ஆனால், மூத்த மகன் வில்லியம், டயானா மறுமணம் செய்வதை விரும்பவில்லை. ஏனெனில், டயானா தனக்காக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

தொடர்ந்து பேசிய டயானா, சரி, என்னைச் சமாளிக்கத் தயாரான ஒருவரை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொன்னார். இதற்கிடையில், ஹஸ்னத் கானை எப்போதும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இளவரசி மனதில் இருந்தது, ஆனால் இதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை.

நாங்கள் டயானாவை திருமணம் செய்து கொள்ளக்கூடிய நபரைப் பற்றி பேசினோம், இளவரசிக்கு ஒரு பெரிய எஸ்டேட் கொண்ட ஒரு இளம் அமெரிக்கன் தேவை என்று நான் சொன்னேன்.

1990 களில் இரண்டு ஆண்டுகளாக தான் டேட்டிங் செய்த கானுடன் இரண்டு மகள்களை பெற்றேடுக்க டயானா விரும்பியதாக கூறப்படுகிறது. பாரிஸில் கார் விபத்தில் டயானா சோகமாக இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த ஜோடி பிரிந்தது.

இருப்பினும், நிபுணர் சாரா பிராட்போர்டு கூறுகையில், டயானா திருமணம் செய்து கானுடன் குழந்தைகளைப் பெறத் தயாராக இருந்தார். டாக்டர் கிறிஸ்டியன் பர்னார்ட்டை ஒரு விருந்தில் சந்தித்து கானை திருமணம் செய்து கொள்ளவும், இரண்டு மகள்களைப் பெறவுள்ளதாக அவரிடம் கூறியது உண்மை என சாரா பிராட்போர்டு கூறியுள்ளார்.