உலகக்கோப்பை அணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட 6 வீரர்கள்!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸக்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கவுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 தொடர் வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. டி20 மற்றும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக கோலியே மீண்டும் தேர்வு செய்யப்ட்டுள்ளார். மேலும் இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்ற வீரர்களில் ஆறு பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

இந்திய ஒருநாள் அணியில், விராட் கோலி (கேப்டன்) , ரோகித் சர்மா, கேஎல் ராகுல், தவான், மணிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடோஜா, ரிஷாப் பண்ட, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், நவதீப் சைனி, கலீல் அகமது, கெதர் ஜாதவ், முகம்மது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இதில் உலகக்கோப்பை அணியில் விளையாடிய தோனி ராணுவத்திற்கு சென்று விட்டதால் விளையாடவில்லை. பாண்டியா, சங்கர் இன்னும் காயத்தில் இருந்து மீளவில்லை. பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மயங்க் அகர்வால், தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக அணியில் மணிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், நவதீப் சைனி, கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். காயத்தில் இருந்து மீண்ட தவான் அணியில் இணைக்கப்ட்டுள்ளார். இதில் பரிதாபமாக வெளியேறியிருப்பது தினேஷ் கார்த்திக் தான் அவருக்கு அணியில் இனிமேல் இடம் கிடைப்பது நிச்சயமாக கடினம் தான் என்றே கூறப்படுகிறது.