அமைதியாக சென்ற சங்கரன்கோவில் பேருந்து விபத்திற்குள்ளான சோகம்..!

இந்த உலகத்தில் நொடிக்கு பல்வேறு விபத்துகள் நடைபெறுகிறது. அவ்வாறு நடைபெறும் விபத்துகளில் பலர் தங்களின் உயிரையும்., உடமைகளையும் இழந்து பரிதாபமாக இழந்து வருகின்றனர். பலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்து பரிதாபமாக வாடி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுப்பட்டி பகுதியில்., குழாய்களை ஏற்றி சென்ற லாரியானது சாலையோரத்தில் பழுதாகி நின்றுகொண்டு இருந்தது.

இந்த சமயத்தில்., லாரியின் ஓட்டுநர் லாரிக்கு பின்புறம் சிவப்பு நிற துணியை கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில்., சென்னையில் இருந்து – சங்கரன்கோவில் சென்ற பேருந்தானது எதிர்பாராத விதமாக லாரியின் மீது மோதியுள்ளது.

நொடிப்பொழுதில் நடைபெற்ற இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்., லாரியின் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., பேருந்தில் இருந்த 11 பேர் பரிதாபமாக படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய மக்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்., இடிப்பதில் சிக்கியிருந்த உடலை பெரும் சிரமத்திற்கு பின்னர் காவல் துறையினர் மீட்டனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.