தமிழக காவலர்களுக்கு இதெல்லாம் இலவசம்….., முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு!!

நேற்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர்ரின் துறைகளான காவல்துறை மற்றும் மீட்பு பணிகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ள 72 ஆயிரம் போலீசாருக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து லிட்டர் பெட்ரோலுக்கு உண்டான வாகன எரிபொருள் செலவுக்கான தொகை, எரிபொருள் படியாக வழங்கப்படும் இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 30 கோடி ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும். காவல்துறை தலைமையகத்தில் அனைத்து ஆவணங்களும் ரூபாய் 5 கோடி செலவில் எண்ம இலக்க முறையில் காப்பக படுத்தப்படும் காவல்துறையில் வாகன மேலாண்மை மற்றும் சொத்து மேலாண்மை ஆகியவற்றில் தானியக்கம் ரூபாய் 25 லட்சம் செலவில் அமைக்கப்படும். அனைத்து காவல் ஆணையர்களுக்கும் ரோந்து காவல் முறை ஒரு கோடி செலவில் அமைக்கப்படும் தமிழகத்தில் 14 இடங்களில் தீயணைப்பு நிலையங்களும் மற்றும் சென்னை மெரினாவில் கடற்கரை மீட்புப் பணிகள் நிலையமும் 17 கோடி செலவில் அமைக்கப்படும்.

தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் நிறுவனத்தினர்யுடன் இணைந்து உளவியல் ரீதியான பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது இதற்காக அரசுக்கு பத்து கோடி ரூபாய் வழங்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப் படுத்தும் விதத்தில் கூடுதல் இயக்குனர் தலைமையில் பிரத்தியோக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என முதமைச்சர் தெரிவித்தார்.