உலகையே கதி கலங்க வைத்த கிம் ஜாங் உன்!

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் அமெரிக்கா மற்றும் ரஷ்யா சுற்றுப்பயணத்தின் போது, அவர் பயன்படுத்திய கார் எப்படி அவருக்கு கிடைத்தது என்பது பற்றிய உண்மை தெரிந்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத சோதனையால் உலகையே மிரட்டி வந்த வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன், அதன் பின் உலக நாடுகளின் அழுத்ததினாலும், பொருளாதார தடையினாலும், தன்னுடைய அணு ஆயுத சோதனையிலிருந்து பின் வாங்கினார்.

அதன் பின் அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி புடினுடனும் இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த இரண்டு தலைவர்களையும் சந்திக்கும் போது, கிம் ஜாங் உன் மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் கார்டு (Mercedes Maybach S600 Pullman Guard) மற்றும் மெர்சிடிஸ் மேபேக் எஸ்62 (Mercedes Maybach S62) ஆகிய இரண்டு விலை உயர்ந்த லக்ஸரி கார்களை கிம் ஜோங் உன் பயன்படுத்தினார்.

ஏற்கனவே வடகொரியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்திருக்கின்றன. இதில் ஐ.நா சபையும் தடை விதித்திருக்கிறது.

இப்படி ஒரு சூழ்நிலையில் வடகொரியாவிலிருந்து இப்படி ஒரு கார் கிம்மிற்கு எப்படி கிடைத்திருக்க முடியும், அதுவும் இப்படி சொகுசு கார்கள் கிடைப்பது கடினமே, இது போன்று தான் அவர் அணு ஆயுதங்களையும் தெரியாமல் வாங்குகிறாரோ என்று உலகநாடுகள் அந்த காரைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தன.

கண்ணில் விளக்கை வைத்து தேடுவது போல், அது எப்படி கிடைத்தது என்பது பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த போது, உலகநாடுகளின் கவனம் அப்படியே ஜெர்மனியைச் சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் மீது திரும்பியது.

ஏனெனில், டெய்ம்லர் நிறுவனத்தின் ஒரு அங்கமாகதான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

ஆனால் உலகநாடுகளின் இந்த கவனத்தால், அதிர்ச்சியடைந்த டெய்மர் நிறுவனமோ நாங்கள் வடகொரியாவிற்கு கார் எதுவும் விற்கவில்லை, என்று உறுதியாக கூறியது.

அதுமட்டுமின்றி குறிப்பாக, மூன்றாவது நபர் மூலம் கார் கிடைத்திருக்கலாம் என்று கூறியது. அதாவது ஒருவர் வாங்கி அந்த காரை கிம்மிற்கு கொடுத்திருக்கலாம் என்று கூறியது.

சர்வதேச தடைகள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல, அவற்றை எப்படியும் தகர்த்து விடுவேன் என்கிற ரீதியில் கிம் ஜோங் உன் இந்த கார்களை பயன்படுத்தியுள்ளதால், இதை இப்படியே விடக்கூடாது என்பதில் மட்டும் தீவிரவாக உலகநாடுகள் துப்பறிய ஆரம்பித்தனர்.

அப்போது பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று இந்த மர்மம் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில். நெதர்லாந்து நாட்டில் இருந்து தான் ஒரு ஜோடி புல்லட் புரூப் மெர்சிடிஸ் பென்ஸ் கவச கார்கள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன.

அதன் பின் 41 நாட்கள் கடல் பயணத்திற்கு பிறகு, அந்த கார்கள் சீனாவிற்கு வந்துள்ளன. சீனாவில் இருந்து அதன் பின் ஜப்பானுக்கு சென்றுள்ளது.

அங்கிருந்து வேறொரு கப்பலில் கடல் வழியாக தென்கொரியாவிற்கு வந்துள்ளன. தென் கொரியா வந்த பின்பு அந்த கப்பல், ரஷ்ய கப்பல் ஒன்றை அங்கு சந்தித்துள்ளது.

அங்கு தான் இந்த கார்கள் ரஷ்ய கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளன. அந்த கப்பலை டிராக்கிக் டிவைஸ்கள் ஆப் செய்யப்படிருந்ததால், சில துரம் அந்த கப்பலை கண்காணிக்க முடியவில்லை.

அதன் பின் ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டோக் நகரின் துறைமுகத்தில் அந்த கப்பல் தென்பட்டது.

அந்த துறைமுகத்திற்கு கார்களை கொண்டு வந்த கப்பல் வந்த நேரத்தில் தான், அங்கு வடகொரியாவின் சரக்கு விமானம் வந்துள்ளது.

அந்த சரக்கு விமானத்தில் இந்த கார்கள் ஏற்றப்பட்டு, வடகொரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. ஒரு காரையே இப்படி திட்டமிட்டு வடகொரியா வாங்கியுள்ளதால், அணு ஆயுதங்கள் மற்றும் மூலப் பொருட்கள் எல்லாவற்றையும் இதே பாணியில் தான் வடகொரியா செய்யுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.