திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சட்ட பேரவையில் பேசினார். அதன் பிறகு இடைத்தேர்தலில் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம், 9 பெரிதா? 13 பெரிதா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினர்.
ஸ்டாலினின் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்து பேசினார். உண்மைக்கு மாறான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றுள்ளது.
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர திட்டமிட்டு, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து, ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி ஆவேசமாக கூறினார்.
இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று தான் 9 இடங்களை மக்கள் எங்களுக்கு அளித்தார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.