ஃபேஸ் ஆப்பால் இந்த விபரீதங்கள் எல்லாம் ஏற்படும்!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் வைரலாகி வந்த ஃபேஸ் ஆப் தற்போது மீண்டும் மாட்டிக்கொண்டு வைரலாகியுள்ளது. சமீபகால புகைப்படங்களில் வயதான தோற்றத்தில் இளமையான தோற்றத்தில் இந்த செயலி உடனுக்குடன் மாற்றி காட்டுவதால் இதை பயன்படுத்தும் பயனாளர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், ஃபேஸ் ஆப் கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரும் அமெரிக்காவின் செனட் மைனாரிட்டி தலைவருமான சக் ஸ்குமர், ஃபேஸ் ஆப் செயலியை தனிநபர் தகவல்கள் திருடப்படும் அபாயமும் இருப்பதாக தெரிவித்தார். ரஷ்ய தயாரிப்பான இந்த செயலியை அமெரிக்காவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதால் எப்.பி.ஐ புலனாய்வு பிரிவு மற்றும் எப்.டி.சி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள அவர் இந்த செயலியை எப்.பி.ஐ புலனாய்வு பிரிவு மற்றும் எப்.டி.சி ஆகியவை முறைப்படி ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.