தெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி! தற்போதைய நிலை என்ன தெரியுமா?

குர்கானை பகுதியை சேர்ந்த ஊர்வசி என்ற பெண் 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரராக இருந்தும் தெரு முனையில் தள்ளு வண்டி கடை ஒன்றினை நடத்தி இன்று ரெஸ்டாரண் திறக்கும் அளவு முன்னெறியுள்ளார்.

ஊர்வசியின் கணவர் பிரபல உற்பத்தி நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்துள்ளார். ஒரு நாள் அவர் தவறி விழுந்து இடுப்பு முறிந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவரின் இறப்புக்கு பின்னர் குடும்பத்தின் வருங்காலத்தை பற்றி கவலைக் கொண்டு ஆரம்பத்தில் ஊர்வசி தள்ளு வண்டி கடையை ஆரம்பித்துள்ளார்.

பின்னர் அவருக்கு சமைப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால் இந்த அளவு முன்னேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆரம்பத்தில் அவரின் மாமியார் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. அவரின் குழந்தைகளும் கூட ரோட்டில் கடை வைப்பது சரிவராது என்று எண்ணினர்.

ஆனால் தன் முடிவில் திடமாக இருந்து அதை நிறைவேற்றியுள்ளார். அவர் ஒரு நாளைக்கு 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை ஈட்டியுள்ளார்.

தற்போது குர்கானில் ‘ஊர்வசி ஃபுட் ஜாயிண்ட்’ என்ற ரெஸ்டாரண்ட் திறக்கும் அளவிற்கு பிரபலமாகி உள்ளார். விடா முயற்சி இருந்தால் நிச்சயம் வெற்றியடையலாம் என்பதற்கு ஊர்வசி இன்று முன் உதாரணமாக இருக்கின்றார்.