வயதான பிறகு பிரபல கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா.?

நெட்டிசன்கள் இணையத்தில் ஏதேனும் ஒன்றை டிரெண்டாக்கி வருகின்றனர். குறிப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வந்த பிரண்ட்ஸ் திரைப்படத்தின் நேசமணி எனும் வடிவேலின் கதாபாத்திரத்தை உலக அளவில் டிரெண்ட் ஆக்கினார்கள்.

இப்போது அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்றம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் வயதான பின்பு எப்படி இருப்பார்கள் என்ற புகைப்படம் இன்று இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. விராட்கோலி, கேன் வில்லியம், ரோகித் சர்மா, தோனி, மலிங்கா, ரஷீத் கான், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோரின் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.