பிரதமர் கருத்திற்கு தேரர் கொடுத்த தகுந்த பதில்!

தேர்தலில் வாக்குகளை இலக்கு வைத்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் 10 லட்சம் வாக்குகள் இழக்கப்படுவதை ரணில் விக்ரமசிங்க அறிந்துகொள்ள வேண்டும் எனஅவர் வலியுறுத்தியுள்ளார்.

சிலாபம், கபல்லேவ பிரிவெனா விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட எந்தவித குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கூறியிருந்தார். இது குறித்து தேரரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளின் போது 2 மாத காலத்தில் எந்தவிதக் குற்றங்களும் அவருக்கு எதிராக இல்லையென்று தீர்ப்பு வழங்குவதாக இருக்குமானால், அந்த விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் புதுமையானவர்கள்.

இவ்வளவு குறுகிய காலப் பகுதிக்குள் குற்றச்சாட்டுக்கள் அற்றவர் என தீர்ப்பு வழங்கப்படுவதாயின் அரசாங்கம் ஒன்று இல்லையென்றே கூற வேண்டியுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.