தமிழகத்தில் கைது செயப்பட்ட இலங்கை வாலிபர்… காரணம்?

தமிழகத்தில் கடல் வழியாக கஞ்சா கடத்திய இலங்கை வாலிபரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக, கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் பொலிசார் தொடர்ந்து கடல் பகுதிகளை கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து இலங்கை வாலிபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர், வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு வாலிபர், கள்ளிமேடு செல்லும் பேருந்தில் சென்றார்.

அவர் மீது மற்ற பயணிகளுக்கு சந்தேகம் எழுந்ததால் இதுபற்றி வேதாரண்யம் கியூ பிராஞ்சு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் இலங்கை காங்கேசன் துறைமுகம் அருகே வெல் வெட்டு துறையை சேர்ந்த அருளானந்தசாமி மகன் பார்த்தசாரதி என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவரிடம் பாஸ்போர்ட், மற்றும் விசா இல்லாததால் பொலிசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

இதில் கஞ்சா வாங்குவதற்காக மேலும் 2 பேருடன் கடல் வழியாக வேதாரண்யம் மணியன்தீவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கூட்டாளிகள் 2 பேரும் சென்று விட்டனர். இதனால் பேருந்தில் வந்த பார்த்தசாரதி மட்டும் பொலிசாரிடம் சிக்கி கொண்டது தெரிய வந்தது.

தொடர்ந்து பிடிபட்ட இலங்கை வாலிபர் பார்த்தசாரதியிடம் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.