டிக் டாக் செயலிக்கு தடையா?

இந்தியாவில் இளைஞர்களை வெகுவாகக் கவரப்பட்ட டிக் டாக் செயலிக்கு தற்போது தடை விதிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் சுதேசி பாதுகாப்பு இயக்கம் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வனி மகாஜன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் டிக் டாக் மற்றும் ஹலோ, ஆகிய செயலிகளில் நம் தேசத்துக்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன மத்திய அரசு தலையிட்டு அதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹலோ உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கவேண்டும் சில சீன நிறுவனங்கள் தவறான கருத்துக்களைப் பரப்பி இந்திய இறையாண்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைக்க முயற்சிக்கிறது. எனவே நமது தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதுடன் கடுமையான சட்டங்களை இயற்றி இதை இதுபோன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.