பிர­மாண்­ட விகா­ரை அமைப்பு?

யாழ்ப்­பா­ணம், வலி.வடக்­கில் இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டி­லி­ருக்­கும் தையிட்­டிப் பகு­தி­யில் இராணு­வத்­தி­ன­ரால் கட்­ட­டம் ஒன்று அமைக்­கும் பணி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அது விகா­ரையை ஒத்­த­தாக இருப்­ப­தாக நேரில் பார்­வை­யிட்ட மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

தனி­யார் காணியை ஆக்­கி­ர­மித்து பிர­மாண்­ட­மான முறை­யில் அந்த விகாரை அமைக்­கப்­பட்டு வரு­வ­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

வலி.வடக்­கில் நேற்­று­முன்­தி­னம் 27 ஏக்­கர் காணி, இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்து மீள­ளிக்­கப்­பட்­டது. விடு­விக்­கப்­பட்ட காணி­களை மக்­கள் உட­னேயே சென்று பார்­வை­யிட்­ட­னர்.

விடு­விக்­கப்­ப­டா­மல் இரா­ணு­வத்­தி­ன­ரின் ஆக்­க­ர­மிப்­பில் உள்ள தனி­யார் காணி ஒன்­றில் மிகப் பிர­மாண்­ட­மான முறை­யில் கட்­ட­டம் அமைக்­கும் பணி­யில் இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அவர்­கள் அமைக்­கும் கட்­ட­டம் விகா­ரையை ஒத்­த­தாக இருப்­ப­தாக மக்­கள் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணத்­தில் போருக்­குப் பின்­னர் நாவற்­கு­ழி­யில் இடம்­பெற்ற முத­லா­வது சிங்­க­ளக் குடி­யேற்­றத்­தில் கட்­டப்­பட்ட விகாரை நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.