நடிகை தேவி கொலை செய்யப்பட்டாரா? போனி கபூர் பாய்ச்சல்.!!

நடிகை ஸ்ரீதேவி ஓராண்டுக்கு முன்னர் காலமானார் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தனது நண்பர் தெரிவித்ததாக கேரள முன்னாள் டிஜிபி கூறியுள்ளார்.

உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி ஹோட்டல் அறையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்ததார் அவரின் இழப்பு பலரால் சந்தேகப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டது. இந்த நிலையில் அவரின் உயிர் இழந்து ஒரு வருடம் கடந்த நிலையில்.

அவரின் இறப்பு குறித்து கேரள மாநில முன்னாள் டிஜிபி ரிஷிராஜ் சிங் ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பிருப்பதாக தன் நண்பர் தடயவியல் நிபுணர் டாக்டர் ராமநாதன் கூறியதாக தெரிவித்தார். இதுகுறித்து கேரள கவுமுதி நாளிதழுக்கு பேசியுள்ள அவர் என் நண்பர் உமாநாதன் இது நிச்சயம் கொலையாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

இதற்கு போனிகபூர் முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இது போன்ற கதைகள் தொடர்ந்து வருவதால் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. அடிப்படையில் இது ஒருவரின் கற்பனை மட்டும்தான் என்று தெரிவித்தார் போனி கபூர்