பிளாஸ்டிக் பையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

இங்கிலாந்தின் சால்ஃபோர்டு பகுதியில் மனித உடல் ஒன்று பிளாஸ்டிக் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மான்செஸ்டரின் சால்ஃபோர்டு அருகே உள்ள வனப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.10 மணியளவில் மனித சடலம் ஒன்று பிளாஸ்டிக் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தின் பாலினம் குறித்து பொலிஸார் எந்த தகவலும் வெளியிடவில்லை.

தடயவியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சிறப்பு அதிகாரிகள் இரண்டு நாட்கள் வரை சம்பவ இடத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இன்று அதிகாலை இப்பகுதியில் அலறல் சத்தம் கேட்டேன். பள்ளிக்கு செல்லும் சிறார்கள் இந்த பகுதியில் வழியாக தான் சென்று வருகிறார்கள். இதனை முதலில் பார்த்த எந்த நபராக இருந்தாலும், அவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.