நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த மதிமுகவுக்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கியது திமுக இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி மதிமுகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டை தர திமுக முடிவு செய்து அதற்க்கான அதகர்வப்பூர்வ அறிவிப்பையும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது
இந்தநிலையில், மதிமுகவிற்கு கிடைத்த ராஜ்யசபா சீட்டில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிடுவதால் சிக்கல் ஏற்பட்டள்ளது அந்த சிக்கலுக்கு காரணமும் திமுக வைகோ மீது போட்ட வழக்கு தான்.
கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும்,அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், அவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது அப்போது ஆட்சியிலிருந்த திமுக தேசதுரோக வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் கடந்த 10 ஆண்டுகளாக விசாரித்து வந்தது.
இந்தநிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதிகள் 10 ஆயிரம் அபராதமும் ஒரு வருட சிறை தண்டனையும் அளித்து சிறப்பு நீதிமன்றம் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு.
இதனால் குற்றவழக்குகளில் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்து தண்டனை பெற்றால் சம்மந்தப்பட்ட அந்த நபர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி இதனால் திமுக தொடர்ந்த வழக்கில் வைகோவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடமுடியாது.