யாழில் பொலித்தீன் பாவனையை தடைசெய்யக்கோாி பல தரப்பட்ட முன்மாதிாி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற்து.
இந் நிலையில், பொலித்தீன் பாவனையை தடைசெய்ய வல்வெட்டித்துறை நகரசபை ஒரு முன்மாதிாியான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை மரக்கறிச் சந்தையில் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்துள்ளது. அத்துடன் சந்தைக்கு செல்லும் அனைவருக்கும் துணி பைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அதுமட்டும் அல்லாமல் அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்துடன் இணைந்து , துணிப்பைகளை தயாரிப்பதற்கான பயிற்சிகளை வழங்கி, அந்த பைகளைப் பெற்று சந்தைப்படுத்தும் செயற்பாடையும் வல்வெட்டித்துறை நகரசபை செய்து வருகிறது.






