மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டார்கள் என காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த நரேஷ் சிங் என்கிற 30 வயது நபர், என்னுடைய மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டார்கள் என பதறியபடியே பொலிஸாருக்கு போன் செய்துள்ளார்.
அதனை கேட்ட பொலிஸார் உடனடியாக அவரது கிராமத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அங்கு அவருடைய மனைவி உயிருடன் நடமாடி கொண்டிருந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, வேண்டுமென்றே தவறான தகவலை கொடுத்தது தெரியவந்தது.
அதன்பேரில் தற்போது அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.






