குற்றவாளியை கொலை செய்தால் ஒரு இலட்சம் பரிசுத்தொகை….

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையாளர்களை கொலை செய்தால், ஒரு இலட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் கடந்த வாரம் தங்களுடைய வீட்டிற்கு வெளியில் அம்மாவிற்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட குழு அந்த சகோதரிகள் இருவரையும் அங்கிருந்து கடத்தி சென்று துஸ்பிரயோகம் செய்தனர்.

இந்த சம்பவமானது நாடும் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், 2015 ஆம் ஆண்டில் ஜேன் அதிகாரக் கட்சியை நிறுவிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யாதவ் நேரில் சென்று சந்தித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு பாலியல் வன்கொடுமையாளனை கொலை செய்தால் ரூ.1 இலட்சம் பரிசுத்தொகையாக வழங்குவேன். அந்த நபர் இரண்டு குற்றவாளிகளை கொலை செய்தால் ரூ.2 இலட்சம் பரிசுத்தொகையாக வழங்குவேன்.

பாலியல் வன்கொடுமை என்பது அதன்மூலம் பாதிக்கப்பட்ட பெண்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையில் சிறிது சிறிதாக விஷத்தை நிரப்புகிறது.

இதுபோன்ற பெண்களை யாரும் திருமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டார்கள். அவர்களது திருமணங்கள் முடிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட, இந்த சம்பவங்கள் குறித்து கணவர்கள் அறிந்தவுடன் [திருமணம்] முறிந்து போக அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன எனக்கூறினார்.

கற்பழிப்பு வழக்குகளுக்கு நீதிமன்றங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் யாதவ் கோரிக்கை விடுத்தார்.

இதன்மூலம் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.