4 வயது மகனுக்கு தாய்ப்பால் கொடுத்த தாய்..

4 வயது மகனுக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை பெருமையாக பதிவிட்ட தாயை இணையதளவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அயர்லாந்தின் கெர்ரி பகுதியை சேர்ந்த ரியோனா ஓ’கானர் (38) என்கிற தாய், தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் விதமாக 120,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதில், “என்னுடைய மகனுக்கு இன்று நான்கு வயதாகிவிட்டது. ஒரு தாயாக நான் பெருமைப்படுகிறேன். அவன் பிறந்ததும் முதன்முதலில் மருத்துவச்சி என் மார்பில் வைத்தபோது, ​​பல வருடங்கள் கழித்து நான் இதைச் செய்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் அதிமானோரால் பகிரப்பட்டது.

இதனை பார்த்த இணையதளவாசிகள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினர். பெரும்பாலானோர் தங்களுடைய தாய்மை அனுபவத்தையும் அதில் பகிர்ந்திருந்தனர். தாய்ப்பால் கொடுப்பதை பெருமையாக நினைப்பதாகவும் கூறியிருந்தனர்.

அதேசமயம் மற்ற சிலர் வளர்ந்த மகனை கெடுப்பதாக கூறி விமர்சித்துள்ளனர். அதில் ஒரு ஆண், எனக்கு இப்பொழுது 55 வயதாகிறது. 3 முதல் 4 வயது வரை நடந்தவை எனக்கு தெளிவாக நியாபகத்தில் உள்ளது. நான் தற்போது என்னுடைய தாயின் மார்பக பராமரிப்பை நினைவில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவதற்காக தான் கட்டைவிரல் விதியை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். என்னை கேட்டால் இதனை ஒரு சிறுவர் துஸ்பிரயோகம் என்று கூறுவேன் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பெண், தாய்ப்பால் கொடுப்பது இயற்கையானது மற்றும் அழகானது. ஆனால் குழந்தை மாமிசம் சாப்பிடும் அளவிற்கு வளர்ந்த பின்னர் தாய்ப்பால் கொடுப்பதை நான் வெறுக்கிறேன். அவர்கள் எப்போதும் குழந்தைகளாக இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

இதுபோன்று சில பெண்கள் ரியோனாவிற்கு எதிராகவும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.