புத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள்!

மத வெறியர்களால் புத்தர் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ இளைஞர் பௌத்த சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

இது குறித்து நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

நிட்டம்புவ நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் மத வெறியர்கள் சிலரினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தர் சிலையின் தலை பகுதியில் கறுப்பு நிற சாயம் பூசி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்க நிறம் பூசப்பட்டிருந்த புத்தர் சிலைக்கு மேல் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் சாயம் பூசப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஸ்பிரே இயந்திரம் பயன்படுத்தி இவ்வாறு நிறத்தை மாற்றியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆண்டுகளுக்கு முன்னர் நிட்டம்புவ ஐக்கிய வர்த்தக சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புத்தர் சிலையை அனைத்து மக்களும் வணங்கி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சேதம் ஏற்படுத்திய நபர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.