ஏ.எல்.விஜய் தமிழில் 10 படங்கள் இயக்கியுள்ளார். இதில் கடைசியாக அவர் இயக்கிய நான்கு படங்கள் தோல்வியையே சந்தித்தது.
தற்போது அவர் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான “தலைவி” படத்தை இயக்கவுள்ளார்.
இயக்குனர் விஜய் ஏற்கனவே நடிகை அமலா பாலை விவாகரத்து செய்த நிலையில் தற்போது இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளாராம். விஜய்யின் குடும்பத்தார்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.
அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள போகும் பெண் ஒரு டாக்டராம். சென்னையில் பொதுநல மருத்துவராக இருக்கிறார். அவர் பெயர் ஐஸ்வர்யா. இதோ அவரின் புகைப்படம்.