தனிப்பட்ட முறையில் மகனுக்கு பெயர் சூட்டும் ஹரி – மேகன்

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னுடைய மகனுக்கு தனிப்பட்ட முறையில் அரண்மனை விதியை மீறி பெயர் சூட்டும் விழா நடத்த உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரி மற்றும் அவருடய மனைவி மேகன், மக்களின் வரிப்பணத்தில் 2.4 மில்லியன் டாலர் செலவில், தங்களுடைய ஃப்ராக்மோர் வீட்டை புதுப்பித்ததற்காக கடந்த வாரம் கடுமையான எதிர்வினைகளை சம்பாதித்தனர்.

இந்த நிலையில் தம்பதியினர் அரண்மனை விதியை மீறி தனிப்பட்ட முறையில் தங்களுடைய குழந்தை ஆர்ச்சிக்கு பெயர் சூட்டும் விழா நடத்த உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தங்களுடைய திருமணம் நடந்த வின்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் தான் மகனுக்கும் பெயர் சூட்டும் விழாவை நடத்த உள்ளார்.

ஆனால் இந்த நிகழ்வில் ராணி கலந்துகொள்ளமாட்டார் என கூறப்படுகிறது.

முன்னதாக வில்லியம் – கேட் தம்பதியினர் தங்களுடைய மூன்று குழந்தைகளின் பெயர் சூட்டும் விழாவை முறைப்படி பத்திரிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தினர்.

ஆனால் ஹரி அப்படி இல்லாமல், தங்களுடைய குழந்தையை தனிப்பட்ட முறையிலே வளர்க்க முயற்சித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.