இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா பயன்படுத்தும் ஹேண்ட் பேக் குறித்த வியக்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
நீட்டா அம்பானிக்கு 55 வயதான போதிலும் அனைத்து விடயங்களிலும் புது பேஷனையே பின்பற்றுவார்.
இந்நிலையில் இவர் பயன்படுத்தும் கைப்பை (Hand Bag) குறித்து ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
நீட்டாவின் ஹேண்ட்பேக் கடந்த 2017ஆம் ஆண்டு கிறிஸ்ட்டீஸ் ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. அந்தக் ஹேண்ட்பேக் முதலைத் தோலால் ஆனது என்றும் அதில் 240 வைரக்கற்கள் பதிக்கப்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்இதன் விலை இரண்டு கோடியே ஆறு லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
இரண்டு கோடியே ஆறு லட்சம் விலை கொண்ட அந்த ஹேண்ட்பேக் உடன் பிரபல பாலிவுட் நடிகைகள் கரிஷ்மா மற்றும் கரினா கபூருடன் நீட்டா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.






