நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இருந்து சுமார் 200 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சா பொதிகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன, இருப்பினும் இச் சம்பவத்துடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினரால் இந்த கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
6 சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் வேறு பகுதிக்கு இடம்மாற்றுவதற்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.






