மீண்டும் அடம்பிடிக்கும் பொதுபல சேனா!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளிப்படுத்த நாடாளுமன்ற தெரிவு குழுவிடம், பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தாம் சாட்சி வழங்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் மற்றும் முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீமின் சகோதரரான பாசீம் எம்.ஹஷீம் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பெட்டிகலோ கம்பஸ் தனியார் நிறுவனம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கிய வாக்குமூலத்திற்கமைய இலங்கை வங்கி மற்றும் முதலீட்டு சபை அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.