கின்னஸ் சாதனை படைத்த பிரபல நடிகை மரணம்!!

தமிழ் தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்ணனி நாடியாக வலம் வந்தவர் நடிகை விஜயநிர்மலா வயது 73. இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரபலமானவர். எம்ஜிஆரின் என் அண்ணன் படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாகவும் இவர் நடித்துள்ளார்.

விஜயநிர்மலா நடிகையாக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் இருந்துள்ளார். இதுவரை 44 படங்களை இயக்கியவரான விஜயநிர்மலா, இதன் மூலம் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். தெலுங்கில் பிரபலமாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை மணந்துக் கொண்டார்.

இவரது மகனான நரேஷூ தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் காண்டினென்ட்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு விஜயநிர்மலா மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடிகை மற்றும் இயக்குனருமான விஜயநிர்மலாவின் மரணம் தமிழ் தெலுகு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.