பிரதமர் மோடியால் 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு தற்போது அவரை செயல்பட்டு வரும் எல்லோருக்கும் வீடு திட்டம் அதாவது, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். நகர்ப்புறம், கிராமப்புறம் என இரு பிரிவுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேருக்கு அடுத்த ஆண்டு முதல் சொந்த வீடுகள் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் செயல்ப்பட்டு வரும் ஆவாஸ் யோஜனா திட்டம் இனியும் தொடர்ந்து செய்லபடும் என்றும். இத்திட்டத்திற்கான எந்த ஒரு பணியும் தங்கு தடையின்றி நடைபெறும் எனவும், 2022 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்ற கனவுத் திட்டம் நிறைவேறும் என, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் 2020 ஆம் ஆண்டின் மூன்று அல்லது நான்கு மாதங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






