பத்ரிக்கையாளரை தாக்கிய MLA மகன்!

ஈரோடு அருகே உள்ள குமலன்குட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் விழா நடைபெற்றது இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் MLA மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.

மடிக்கணனி வழக்கும் விழா முடிந்த பின்னர் கே.வி.ராமலிங்கம் MLA செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது வார இதழ் செய்தியாளர் ஏதோ கேள்வி எழுப்பியதால். வார இதழ் செய்தியாளர்களை கே.வி. ராமலிங்கத்தின் மகன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, செய்தியாளர்கள் அளித்த புகாரின் பெயரில் ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.