ஈரான் நாடாளுமன்றத்தில் அமெரிக்காவிற்கு மரணம் என ஈரானிய மக்களவை உறுப்பினர்கள் கோஷமிட்டுள்ளனர்.
ஈரான் மீதான இராணுவ தாக்குதலில் இருந்து கடைசி நிமிடத்தில் பின்வாங்கினார் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இத்தாக்குதல் நடத்ப்பட்டிருந்தால் சுமார் 150 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்ற காரணத்தினால் பின்வாங்கியதாக குறிப்பிட்டார். மேலும், பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரான், பிராந்தியத்திற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் நாங்கள் உறுதியாக பதிலடி கொடுப்போம் என தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளிடையே குழப்பத்தை பரப்புவதன் மூலமும், பயங்கரவாத குழுக்களுக்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்குவதன் மூலமும், பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதன் மூலமும், உலகின் உண்மையான பயங்கரவாதி அமெரிக்கா தான்.
இவ்வாறான அமெரிக்கா வாருங்கள், பேச்சுவார்த்தை நடத்துவோம் என அழைப்பு விடுக்கிறது என ஈரான் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளார். இதன் போது, ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அமெரிக்காவிற்கு மரணம் என கோஷமிட்டனர்.