கல்முனையில் உண்ணாவிரதம் இருக்கும் மாம்பழ ராஜனே ஏன் இப்படி செய்தாய்?

உண்ணாவிரதத்தை உண்மையில் நேற்று முன்தினம் நிறுத்தியிருந்தால் ஒரு வகையில் அந்த போராட்டத்திற்கான பெறுமதி பேணப்பட்டிருக்கும் என்பதுடன், வெற்றியும் கிட்டியிருக்கும்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் டெலோ மாநகரசபை உறுப்பினராக இருந்து கொண்டு கூட்டமைப்பிற்கு எதிராக கூச்சலிட்ட மாம்பழ ராஜனின் புத்தி கெட்டு விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் எதற்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம், அத்துடன் தான் எந்த கட்சியில் இருக்கிறோம் என்ற அடிப்படை அறிவு இல்லாத மாம்பழ ராஜன், முஸ்லிம் தலைவர்களுடன் கதைத்து விட்டு வந்து ஏமாற்றி சென்ற ஞானசாரரின் வாக்குறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்டு, இடைவேளை எடுத்து மீண்டும் போராடுகின்றமை காமெடியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் பெறுமதியான மக்கள் போராட்டத்தை பலவீனப்படுத்தி சந்திசிரிக்க வைத்துள்ளமை அம்பாறை மாவட்ட தமிழர்கள் மத்தியிலும், கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.