நேற்றைய போட்டியில் வரலாற்று சாதனையை படைத்த இந்திய வீரர்!

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி திரில் வெற்றியை பெற்றது.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 224 ரன்களை எடுத்தது இதை அடுத்து ஆப்கானிஸ்தான் 213 ரன்கள் 10 விக்கெட் இழப்பிற்கு 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இதில் முகமது சமி இந்திய அணியின் சார்பாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இந்த ஆட்டத்தில். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 63 பந்துகளில் 67 ரன்களை குவித்தார் இவர் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களை கடந்துள்ளார். இதுவரை உலக கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களை அடித்த இந்திய கேப்டன்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் முதலிடத்தில் முகமது அசாருதீன்.

உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களை கண்ட இந்திய கேப்டன்கள்:
முகமது அசாருதீன் (1992)
விராட் கோலி (2019)