இங்கிலாந்து அணியை பந்தாடியது இலங்கை அணி.!

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி விளையாடி வருகிறது. அதில் இலங்கை அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது 3 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது அந்த அணியில் அவிஷ்கா பெர்னான்டோ 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்களை எடுத்தார் மாத்திவ்ஸ். இந்த அணி 50 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி சார்பாக ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் களமிறங்கிய தொடக்கத்தில் பெரும் சரிவை சந்தித்தது பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 89 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பெண் ஸ்டோக்ஸ் 89 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரைத் தவிர்த்து அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் இங்கிலாந்து அணி 47 ஓவர்களுக்கு 10 விக்கெட் இழப்பிற்கு 212 எடுத்தது. இதையடுத்து இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.