மனைவியை பிரிந்த கணவனுக்கு கோடிக்கணக்கில் கிடைத்த பணம்..

அமெரிக்காவில் நபர் ஒருவருக்கு லொட்டரியில் பல கோடிகள் பரிசு விழுந்த நிலையில் அதில் பாதியை விவாகரத்தான தனது மனைவிக்கு அவர் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் Detroit நகரை சேர்ந்தவர் ரிச் ஜிலஸ்கோ. இவர் தனது மனைவி மேரி பெத்துடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2013 காலக்கட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்ந்ததோடு, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது ரிச் லொட்டரி சீட்டு வாங்கினார், இதில் அவருக்கு மெகா பம்பர் பரிசாக $30 மில்லியன் கிடைத்தது.

இந்நிலையில் மேரிக்கும் அந்த பரிசு தொகையில் பங்கு வழங்க அவர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இதற்கு ரிச் மறுத்த சூழலில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. ஆனால் லொட்டரி பரிசு பணத்தை மேரிக்கு பிரித்து வழங்கும் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில் வாதாடிய ரிச் தரப்பு வழக்கறிஞர், லொட்டரில் ரிச்சுக்கு தான் அதிர்ஷ்டம் அடித்தது, அதில் மேரிக்கு சம்மந்தமில்லை.

அதனால் பரிசு தொகையில் பாதியை அவருக்கு வழங்கமுடியாது என வாதிட்டார்.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி மில்ஸ் கூறுகையில், ரிச் வாங்கிய லொட்டரி டிக்கெட் அவருக்கும், மேரிக்கும் பொதுவானது. ஏனெனில் அப்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படவில்லை.

அதனால் பரிசு தொகையில் பாதியை மேரிக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.