கல்முனை நோக்கி விரையும் அரசியல் முக்கியஸ்தர்!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தண தேரர் 20இற்கும் மேற்பட்ட பௌத்த துறவிகளுடன் கல்முனை நோக்கி விரைந்துள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேசத்திற்கு முன்பாக நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் போரட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக அவர் கல்முனைக்கு விரைந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி செல்லும் அவர் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேசயலகத்தை தரமுயர்த்துவதற்கு உரிய தீர்ப்பு வழங்க தாமதம் ஏற்படும் பட்சத்தில் கல்முனை பிரதேசம் முடங்குவதற்கு வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.