இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனமாக கையாளக்கூடிய கலைகளில் ஒன்றாகும். மேலும் பெற்றோர்கள் வளர்ப்பின் படியே ஒரு குழந்தை சிறந்த மனிதனாக இந்த சமூகத்தில் பிரதிபலிக்க முடியும். குழந்தைகளை பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் எவ்வளவுதான் கவனமாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாலும், அவை எந்த நேரத்தில் என்ன சேட்டை செய்யும் என்பது யாருக்கும் தெரியாது.
அவ்வாறு குழந்தை செய்யும் சேட்டையால் சில சமயங்களில் பெரும் விபரீதமே ஏற்படலாம். எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் எந்நேரமும் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒருபுறமிருக்க சில குழந்தைகள் அவர்களின் அறிவார்ந்த செயல்கள் மற்றும் எண்ணத்தால் மக்களின் மனதை வென்று வருகின்றனர்.
அவ்வாறு உள்ள சில குழந்தைகளின் நகைச்சுவை மற்றும் நல்ல எண்ணத்தை எதிர்பாராத நேரத்தில் காட்சிகளாக பதிவு செய்து இணையத்தில் பெற்றோர்கள் பதிவிடுகின்றனர். இது குறித்த வீடியோ பதிவுகள் அவர்களின் பேச்சுக்கள் மற்றும் நல்ல எண்ணங்களை பொறுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிகளவில் இணையத்தில் பரவி., அந்த குழந்தைகள் மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை விதைத்து., அவர்களின் மனதில் வாழ்கின்றனர்.
கடந்த சில வருடங்களாகவே இது போன்ற குழந்தைகளின் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகளவு வைரலாகியது. அதனை போன்று சங்கமா? சாப்பாடா? என்ற கேள்விக்கு சாப்பாடுதான் முக்கியம்., பசிக்குமுள்ள… என்று தனது சுட்டித்தனத்தால் அதிகளவு மக்களை கவர்ந்ததையும் அறிவோம். இந்த நிலையில்., தற்போது வெளியான வீடியோ பதிவானது அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த வீடியோ பதிவில்., பிறந்து சில நாட்கள் அல்லது மாதங்கள் ஆகும் பச்சிளம் குழந்தையை., குழந்தையின் தாயார் குளிக்க வைத்து கொண்டு இருக்கிறார். இதனை அருகில் இருந்து வேடிக்கை பார்க்கும் குழந்தையின் சகோதரி., குழந்தையை பாட்டி எவ்வாறு குளிக்க வைக்கிறார் என்று கண்டு கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில்., குழந்தையின் உடலில் இருக்கும் அழுக்குகள் நன்றாக வெளியேறுவதற்கு., நமது முன்னோர்களின் கூற்றுப்படியும் குழந்தையின் கால்களை நன்றாக இழுத்து விட்டு குளிக்க வைக்கிறார்.
இதனை கண்டு பதறிப்போன சகோதரி தனது பாட்டியை பார்த்து., பாட்டி குழந்தையின் காலை பிடித்து இழுத்துவிடாதே என்று கூறுகிறார். இதனை கேட்கும் அங்குள்ள நபர்கள் அனைவரும் அவரின் அன்பை பார்த்து வியந்து., குழந்தையின் சுட்டித்தனத்தை கண்டு சிரித்து மகிழும் காட்சியானது வைரலாகி வருகிறது.
ஏ.. கால புடிங்கிறாத ஆச்சீ.. ??? pic.twitter.com/87BB1QgnWy
— ♔.. கிங்மேக்கர் ..♔ (@iam_AKfan) June 17, 2019






