இன்று நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க!

இன்று மக்களவையில் தமிழக உறுப்பினர்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றது பெரிய விஷயமாக பேசப்படுகிறது. இந்திய அளவில் திமுகவினரால் பெருமையாக ட்ரெண்ட் செய்யப்பட்டது.

ஆனால் இந்த நிகழ்வு ஒன்றும் புதிதல்ல. கடந்த1960 ஆம் ஆண்டு முதலே உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றுள்ளனர். ஏன் கடந்த 2014 ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் பலர் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர். மக்களவை துணை சபாநாயகராக நியமிக்கப்பட்ட தம்பிதுரை மட்டும் ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இப்பொது தமிழில் பதவியேற்றதை பெருமையாக பேசுபவர்கள், கடந்த முறை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் சிலர் ஆங்கிலம் தெரியாததால், ஆங்கிலத்தில் பதவியேற்காமல் தமிழிலேயே பதவியேற்றதால் ஆங்கிலம் தெரியாத இவர்கள் எல்லாம் பாராளுமன்றத்திற்கு போய் என்ன செய்ய போகிறார்கள்? என்று கேலி பேசி ஏளனம் செய்ததும் உண்டு.

அப்போது மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் கூட தமிழில்தான் மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

இப்போது தமிழில் பதவியேற்றது பெரிய விஷயமாக பேசப்படுகிறது என்றால், அப்போது இதற்கு முன்பு யாரும் தமிழில் பதவியேற்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. அப்படி தமிழில் பதவியேற்கவில்லை என்றால் வாய்ப்பு இருந்தும் ஏன் இதற்கு முன்பு தமிழில் பதவி ஏற்கவில்லை? என்ற கேள்வியும் எழுகிறது. இன்று பதவியேற்ற திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக எம்பிக்களில் பலர் ஏற்கனவே மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள் தான்.

இதற்கு முன்பு உறுப்பினர்களாக இருந்த திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் தமிழில் ஏன் பதவியேற்கவில்லை என்றும், தமிழை பொருட்படுத்தவில்லை என்றும், இன்று ட்ரெண்ட் செய்த திமுகவினர் தாங்களே ஒப்புக் கொண்டது போல ஆகிறது.

இதுவரை ஒருவேளை தமிழில் பதவியேற்க வசதி ஏற்படுத்தி தரவைல்லை என்று அவர்கள் கூறினால், அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தற்போதைய அரசுக்கு தான் இந்த பெருமையெல்லாம் சேரும். இருந்தாலும், தமிழில் பதவியேற்பு, தமிழ் வாழ்க கோஷம் வரவேற்க வேண்டிய ஒன்றே.

இன்றைய நடைபெற்ற நல்ல விஷயம் ஒருவர் விடாமல் அனைத்து உறுப்பினர்களும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர் என்பதே. தொடரட்டும் தமிழ் பணி. இனி செய்யபோகும் தமிழ் பணிகளுக்காக தமிழக உறுப்பினர்களுக்கு நாமும் வாழ்த்தினை சொல்வோம்.